செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (16:53 IST)

மக்கள் நீதி மய்யத்தின் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா? கௌதமி கேள்வி!

பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜகவின் கௌதமி மக்கள் நீதி மய்யம் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவில் இணைந்த கௌதமிக்கு ராஜபாளையம் தொகுதி வழங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் கௌதமி போட்டியிடவில்லை. இப்போது கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் துணைவரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அவர் விமர்சனம் செய்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் ‘கமல்ஹாசனை பிரிந்து பல ஆண்டுகள் கடந்து விட்டது. அது முடிந்துபோன பிரச்சினை. அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.