வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (19:53 IST)

இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரனோ பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இதனை அடுத்து தளபதி விஜய்யின் ரசிகர்கள் உள்பட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
இருப்பினும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கமல் நடிக்க உள்ள விக்ரம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பணிகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த பணிகள் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது