ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:03 IST)

மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா: இன்றும் நாளையும் பள்ளி விடுமுறை!

கோவை அருகே பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனையடுத்து அந்த பள்ளிக்கு இன்றும் நாளையும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கனமழைக்கு பிறகு பள்ளி திறந்த மறுநாளே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.