1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:47 IST)

ரஹானே பார்ம் குறித்து பேசிய விராட் கோலி!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரஹானேவின் இடம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான பார்மில் இருக்கிறார். இதனால் மும்பை டெஸ்ட்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஒருவருடைய பார்ம் குறித்து யாராலும் பேசமுடியாது. முக்கியமான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த ஒரு வீரரை நான் ஆதரிக்க வேண்டும். தனியொரு வீரர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அணியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.