செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:45 IST)

கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம்… உலக சுகாதார அமைப்பு!

கொரோனா தீவிர தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையால் எந்த பலனும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 

பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் தேறியவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா செல்களை எடுத்து தற்போது கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிப்பது. ஆனால் இந்த சிகிச்சை பெற்றவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இதனால் எந்த பலனும் கிடைத்ததற்கான தரவுகள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதனால் இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.