வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:18 IST)

கடலில் மூழ்கி இறந்த சச்சின்: கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது சோகம்

கன்னியாகுமரி பகுதியில் கடலோரத்தில் விளையாடிய சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சச்சின், ஆண்டோ ரக்‌ஷன், ரகீத் மற்றும் ரெஜின். இவர்கள் அப்பகுதியில் கடற்கரைக்கு அருகில் உள்ள தென்னந்தோப்பின் அருகே கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கிரிக்கெட் பந்து கடலில் சென்று விழுந்திருக்கிறது.

அதை எடுப்பதற்காக சச்சினும், ஆண்டோவும் கடலில் இறங்கியபோது ராட்சத அலை ஒன்று அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பதறிப்போன ரகீத் மற்றும் ரெஜின் இருவரும் அவர்களை காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர். அவர்களும் கடலலையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கத்தி கதறியுள்ளனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் ஓடி சென்று அந்த சிறுவர்களை மீட்க முயற்சித்தனர்.

நீண்ட நேர தேடுதலில் சச்சினையும், ஆண்டோவையும் கண்டுபிடித்தனர். கரைக்கு கொண்டு வரும் வழியிலேயே சச்சின் பரிதாபமாக உயிரிழந்தான். ஆண்டோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதியில் சிகிச்சை பெற்று வருகிறான். மீத இரண்டு சிறுவர்களின் உடல் கிடைக்கவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.

ஒரே நேரத்தில் இத்தனை சிறுவர்கள் இறந்த சம்பவம் மண்டைக்காடு பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.