1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Former Tamil Nadu governor fatima beevi died

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

பாத்திமா பீவி
தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி காலமானதையடுத்து அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது  ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பாத்திமா பீவி. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்தவர் என்பதும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

இதையடுத்து தமிழக கேரள அரசியல் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
IRCTC இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி..!