1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (12:46 IST)

முன்னாள் எம்பி மஸ்தான் கொலை செய்யப்பட்டாரா? 5 பேர் கைது!

masthan
முன்னாள் எம்பி மஸ்தான் சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்ததோடு இந்த கொலையில் சம்பந்தப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
முன்னாள் எம்பி மற்றும் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் மஸ்தான் என்பவர் கடந்த 22ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக வந்து மரணமடைந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தனது தந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் 
 
அப்போது இம்ரான் என்பவருக்கு மஸ்தான் பணம் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இம்ரான் உள்பட 5 பேர் சேர்ந்து அவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து இம்ரான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran