1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு: இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு

velumani
முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வழங்க தமிழக அரசுக்கு வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்தது
 
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது