திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 18 மே 2022 (19:16 IST)

வெளிநாடு செல்ல அனுமதி: மனுவை திரும்ப பெற்ற பிரபல நடிகை!

Jacqueline
வெளிநாடு செல்ல அனுமதி: மனுவை திரும்ப பெற்ற பிரபல நடிகை!
வெளிநாடு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவை அவர் திரும்ப பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார் 
 
இந்த நிலையில் தான் தற்போது வெளிநாடு செல்லவில்லை என்றும் அதனால் தனது மனுவை வாபஸ் செய்வதாகவும் தற்போது மீண்டும் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிகிறது.