வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (12:22 IST)

நடிகை மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?

jayakumar
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த விவகாரத்தில்  மறு விசாரணை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
 
இந்த நிலையில் நடிகை சித்ரா தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் வந்து சென்றதாக அப்போது வதந்திகள் பரவியது
 
இதுகுறித்து தற்போது விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சித்ரா வழக்கை மீண்ட்டும் விசாரணை நடத்த எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமுமில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்