வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:02 IST)

நீலகிரியில் ஆட்கொல்லிப் புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு!

நீலகிரி தேவன் எஸ்டேட் பகுதியில் மூன்று பேரை கொன்ற ஆட்கொல்லி புலி தற்போது மசினக்குடி நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டுப்புலி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். முன்னதாக இந்த புலி கூலி வேலை பார்க்கும் நபர் ஒருவரை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பசுமாட்டை கொன்ற புலி தற்போது மீண்டும் ஒரு மாட்டை கொன்றுள்ளது. இந்நிலையில் ஊருக்குள் புலி அட்டகாசம் செய்து வருவதால் அதை பிடிக்க வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனால் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் கடந்த 6 நாட்களாகவே பிலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்கள் வெளியே வரவே பயந்து வரும் சூழலில் தற்போது ஆட்கொல்லி தேவன் எஸ்டேட்டிலிருந்து மசினக்குடி நோக்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்கொல்லியின் நடமாட்டம் நீலகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் T 23 என்ற அந்த புலியினை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.