வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (17:53 IST)

பாஜகவை வீழ்த்த அயல்நாட்டு சக்தி..! தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

Tamilasai
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்சென்னை மக்கள்,  ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
 
தென்சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்று எண்ணுகிற இளைஞர்கள் என்னோடு இணையலாம் என்றும் தென்சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் மக்களவை உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்ற பிரேமலதாவின் கருத்தில் உடன்படுகிறேன் என்று தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தன்னுடைய ஆளுநர் பதவி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார்.
 
அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் தற்போது கூறுகின்றனர் என்றும் நாங்களும் அதையேதான் சொல்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் காலம் குறிப்பிட்டார்.