செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (18:13 IST)

ஆபாச வீடியோ சர்ச்சை.! பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி..!

Prajwal Ravanna
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 28 மக்களவை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன்  பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் மீண்டும் களமிறக்கப்பட்டார். 
 
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் சர்ச்சை எழுந்தது. அவர் பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்ததாக புகார் கூறப்பட்டது. இதை அடுத்து வெளிநாடு தப்பி சென்ற அவர், சமீபத்தில் இந்தியா வந்து நேரில் சரணடைந்தார்.
 
இந்நிலையில் ஹாசன் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்,  பிரஜ்வல் ரேவண்ணா தோல்வியடைந்தார். பிரஜ்வல் ரேவண்ணா மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 339 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயாஸ் எம் படேல் 6 லட்சத்து 72 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்று 42 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
ஹாசன் என்பது முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் தலைவருமான தேவகவுடாவின் சொந்த மாவட்டமாகும். மேலும் ஹாசன் தொகுதி எப்போதுமே ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக தான் இருந்து வருகிறது. 2004, 2009, 2014 தேர்தல்களில் தேவகவுடா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.


அதன்பிறகு 2019ல் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக அவர் தொகுதியை விட்டு கொடுத்தார். 2019ல் ஹாசனில் வென்ற பிரஜ்வல் ரேவண்ணா தற்போது தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.