வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (17:39 IST)

வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி..!

Modi Won
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி 1,52,513  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்ற நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

 
மக்களவைத் தேர்தலில் தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது