வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (21:35 IST)

மக்களவை தேர்தல் 2024! தமிழகத்தில் வெற்றிவாகை சூடியவர்கள் யார்? முழு விவரம்!

Lok sabha winners
Lok Sabha Election Results 2024 Live updates: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று வாகை சூடியவர்கள், படுதோல்வி அடைந்தவர்கள் விவரங்கள்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் 2.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படுதோல்வி

வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் நோட்டாவை விட (4,712) குறைவான வாக்குகள் (1,583) பெற்று தோல்வி

1984 முதல் 9 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டுள்ள புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 9வது முறையும் தொடர் தோல்வி அடைந்தார்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வி

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் பரிதாப தோல்வி அடைந்தார். தாமரை சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் டெபாசிட் இழந்து பரிதாப தோல்வி அடைந்துள்ளார்.

தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3,21,493 வாக்குகள் பெற்று பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியா தோல்வி அடைந்தார்.

மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் 7-வது முறையாக கிருஷ்ணசாமி தோல்வி அடைந்துள்ளார். சுமார் 1,30,000 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரிடம் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார்.

கரூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 5,04,131 வாக்குகளையும், அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எல்.தங்கவேல் 3,42,415 வாக்குகளையும் பெற்றுள்ளார்.  ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 88,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 4,12,196 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலைக்கு 3,24,272 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு 1,68,208 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த அதிமுக வேட்பாளர் குமரகுருவை புதிய வேட்பாளரான திமுகவின் மலையரசன் தோற்கடித்துள்ளார். திமுக வேட்பாளர் மலையரசன் 5,55,455 வாக்குகளையும் அதிமுக வேட்பாளர் குமரகுரு 5,01,207 வாக்குகளையும் பாமக வேட்பாளர் தேவதாஸ் ராமசாமி 72378 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதில் திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றியடைந்துள்ளார்.

நாகப்பட்டினம் தொகுதியில் சிபிஐ கட்சி வேட்பாளர் செல்வராஜ் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா, 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 
கடலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட எம்.கே விஷ்ணுபிரசாத் 1,85,896 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட துரை வைகோ 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆரணி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தரணி வேந்தன் 1,90,783 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 5,38,550 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வம் 5,86,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.