புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (08:15 IST)

கோவளம், முட்டுக்காடு பகுதியை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர்.. சுற்றுலா துறை செய்த வசதி..!

கோவளம் மற்றும் முட்டுக்காடு பகுதியை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதியை தமிழ்நாடு சுகாதார சுற்றுலாத்துறை செய்து கொடுத்துள்ளது.  

தனியார் நிறுவனம் சார்பில் நேற்று  முட்டுக்காடு படகு துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை போன்ற பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்த்துவிட்டு வரும் வசதி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பயணிகள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நேற்று காலை 11 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் சுற்றுலா சென்றது. இதில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு 5000 ரூபாய் கட்டணம் என்றும் பத்து நிமிடம் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.  

நேற்றைய முதல் நாளில் மட்டும் 20 முறை ஹெலிகாப்டர் இயக்கப்பட்டது என்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இதில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரம்மியமான காட்சிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினத்திலும் அதிக சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க உள்ளனர்.

Edited by Siva