வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:49 IST)

ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Ooty Train
ஊட்டி மலை ரயில் கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் 16ஆம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது. எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் செல்லும் மலை ரயில் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதி வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி பருவமழை நீடிக்கும் என்ற தகவலை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் ஊட்டி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Edited by Siva