வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (20:36 IST)

லோகேஷ் கனகராஜுக்கு ஹெலிகாப்டர் உறுதி! ''லியோ ''பட வசன கர்த்தா டுவீட்

leo vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்.  இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஸ்கின் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.  இப்படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைப்பில், 7 ஸ்கீரின் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  இப்படம் வரும் (அக்டோபர் 19 ஆம் தேதி) இன்று  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.இதற்கிடையே  சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எனக்கு படத்தில் வசூல் பற்றி பிரச்சனை இல்லை. நஷ்டம் இல்லாமல் இருந்தாலே போதும்.  இப்படத்தின் வசூல் பற்றி தயாரிப்பாளர் கேட்டால், நான் ஹெலிகாப்டர் கேட்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில், இப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலீட்டியது. எனவே இப்படத்தின் வசன கர்த்தா, ஹெலிகாப்டர் உறுதி என தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது.