திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (22:25 IST)

கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் அதிமுக சார்பில் அன்னதானம்

ADMK
கரூரில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத நான்காவது  சனிக்கிழமையான இன்று  முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்களுடன் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் அமைக்க பட்டிருந்த அன்னதான கூடத்தில் அன்னதானம் வழங்கி பக்தர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

Edited by Sinoj