திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (11:43 IST)

மிக்ஜாம் புயல்: பள்ளிக் கரணை பகுதியில் பயங்கர வெள்ளம்… அடித்து செல்லப்படும் கார்கள்!

மிக்ஜாம் புயல் காரணமாக நள்ளிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் கனமழை பெய்து பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளனர்.இன்று மாலை வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பல  இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை வருத்தம் கொள்ள செய்துள்ளன. வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மழை பாதிப்பால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக்கரணை பகுதியும் ஒன்று. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சாலையில் செல்லும் வெள்ளம் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களை இழுத்து செல்லும் வீடியோக் காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.