1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (11:11 IST)

சென்னை விமான நிலையத்தின் ஓடுதளத்தை சூழ்ந்த வெள்ள நீர்… விமானங்கள் ரத்து!

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து பெருமழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவர்த்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளத்தில் மழை நீர் வெள்ளமாக ஓடுவதால் புறப்பட இருந்த மற்றும் தரையிறங்க இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக அவசியமாக இருந்தால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளுமாறும், அவசியம் இல்லாவிட்டால் பயணத்தை ரத்து செய்யவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.