1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (17:55 IST)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா: அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

shahib al hassan
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே இன்று நடந்த போட்டியின் கடைசி பந்து வரை போட்டி த்ரில்லாக அமைந்தது 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது என்பது தெரிந்ததே. விராத் கோஹ்லி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்
 
இந்த நிலையில் 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. அதனால் வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் 16-வது ஓவரில் வங்கதேச அணி வெற்றி பெற 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 5 பந்துகளில் 13 ரன்கள் எடுத்ததால் கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் போட்டி டை ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தற்போது 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva