குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி!
குற்றால அருவிகளில் மூன்றுநாட்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் குளிக்க அனுமதி
கடந்த மூன்று நாட்களாக குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு நேற்றுவரை சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தடை நீங்கி இன்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஐயப்ப பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
