வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (16:59 IST)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தின விளக்கு பூஜை.....

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்   
 
இக்கோவிலுக்கு சங்கரன்கோவில் தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கருவலம்,புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கூட்டம் கூட்டமாக   பாதரையாத்திரையாகவும் வாகனங்களிலும் அம்மனை தரிசனம் செய்ய வருவர்.
 
கோவிலில் பக்தர்கள் அக்னி செட்டி ஆயிரம்கண் பானை, மா விளக்கு உள்ளிட்ட தங்களது  வேண்டுதல்,மற்றும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். 
மேலும் இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
 
இன்று ஆவணி மாதம் பௌர்ணமி என்பதால் இன்று திருக்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்     திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து     பெண்கள் அம்மனுக்கு விளக்கு ஏற்றி அம்மன் பாடல்கள் பாடி பக்தியுடன் பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். 
அம்மன் பாடல்கள் பாடும் போது ஏராளமான பெண்கள் அருள் வந்து ஆடினர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலை, குங்கும சிமிழ், விளக்கு  மற்றும் பிரசாதம் விளக்கு பூஜை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இன்று பௌர்ணமி தின சிறப்பு அபிஷேகமும் அம்மனுக்கு நடைபெற்றது. அபிஷேத்தின் போது பால் பன்னீர் ஜவ்வாது தேன் உள்ளிட்ட 16 வகை வாசனை மற்றும் திவ்ய பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
 
சிறப்பு அலங்காரத்தில்  வீற்றிருந்த  இருக்கன்குடி மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிளக்கு பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.