ரேஷனில் கைரேகைக்கு பதில் கண் கருவிழி பதிவா?
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை.
தமிழகம் எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்ற நிலை உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் போது மக்கள் கைரேகை வைக்கும் போது அதன் மூலமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புண்டு என்பதால் தற்காலிகமாக அதை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொற்று குறைந்ததால் மீண்டும் கைரேகை முறையே மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
இதனைத்தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் பதிவின் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.