திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (16:50 IST)

மோசடி வழக்கில் கைதான நிதி நிறுவன இயக்குனர் தற்கொலை: என்ன காரணம்?

suicide
ரூபாய் 100 கோடி மோசடி செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட நிதி நிறுவன இயக்குனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவையில் சதீஷ்குமார் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
 
இதனை அடுத்து சதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. 
 
மேலும் சதீஷ்குமார் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் திடீரென அவர் தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva