அமெரிக்கா: சீன புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது துப்பாக்கிசூடு ! 10 பேர் பலி
அமெரிக்க நாட்டில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் உள்ள வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 2 துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
லாஞ் ஏஞ்சல்ஸ் அருகே நடன ஸ்டுடியோவில் துப்பாக்கிதாரி 11 பேரை கொன்ற 48 மணி நேரத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிவைத்து இந்த தாக்குதலை 75 வயது முதியவர் கேன் டிரான் என்ற ஆசிரியர் என்றும் அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகிறது.