திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (15:55 IST)

மாட்டு வண்டிகளை கொண்டு திமுக ஆர்பாட்டம்: மாடுகள் மிரண்டதால் 10 பேர் படுகாயம் – கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை நூதன முறையில் நடத்துவதற்காகவும், மாட்டுவண்டிகள் மூலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட தி.மு.க வினர் முயற்சித்துள்ளனர்.



இந்நிலையில் கரூர் அருகே தாந்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் அருகே கரூர் நோக்கி சென்ற போது, எதிரே வந்த இரு சக்கர வாகனங்களை கண்டு மாட்டு வண்டியில் மாடுகள் மிரண்டது. இதையடுத்து மாடுகள் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியதோடு, காவல்துறை சார்பில் போடப்பட்டிருந்த இரும்பு வேலி தடுப்புகள் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், இரு சிறுவர்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 10 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.




சி.ஆனந்தகுமார். கரூர்