தொடர்புடைய செய்திகள்
- பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு பயங்கரவாதி தமிழகத்தில் பதுங்கலா? தீவிர வேட்டை
- கபே உணவகத்தில் வெடித்த மர்மபொருள்!
- ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! குறைந்தது ரயில் கட்டணம்...
- இலங்கை கடற்படை கைது செய்யும் மீனவர்களை தண்டிக்க புதிய நடைமுறை - தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
- அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து.! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!!
ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைக்கு கட்டணம்: திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு..!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது
இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்படுவதாவது:
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகின்ற 20.03.2024 க்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என திருக்கோயில் இணை ஆணையர்/செயல் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
