செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (08:59 IST)

மனைவி மீது சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற கொடூர தந்தை

சிவகாசி அருகே  சேர்ந்த சிவக்குமார் என்பவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அனைவரின் மனதையும் பதற வைத்துள்ளது.
விருதுநகா் மாவட்டம் மாரனேரியைச்  சேர்ந்த சிவக்குமார், இவரது மனைவி தனலட்சுமி. 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற இவர்களுக்கு கடந்த சில மாதஙளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. மனைவியின் மீது சந்தேகப்பட்ட சிவக்கிமார், குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று  தனலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தனலட்சுமி குழந்தையை சிவக்குமார் வீட்டில் விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ளான். தனலட்சுமியின் தாயார் குழந்தையைக் காண சிவகுமார் வீட்டுக்கு சென்றபோது, குழந்தையும் இல்லை, சிவகுமாரும் இல்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த சிவக்குமாரை விசாரித்ததில், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

பெற்றவர்கள் செய்த தவறிற்கு அந்த பச்சிளம் குழந்தை என்ன செய்தது. குழந்தையை வீசிக் கொன்ற கொடூர தந்தைக்கும், குழந்தையை விட்டுச் சென்று வேறு திருமணம் செய்து கொண்ட தனலட்சுமிக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.