திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2017 (09:26 IST)

போலீஸார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை எதிர்பார்க்காத அதிரடிப்படையினர் சுதாரித்துக்கொண்டு, நக்சல்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் எட்டு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
என்கவுண்டரில் சுடப்பட்ட நக்சல்கள் அனைவரும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல், கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் கூறினர். நக்சல்கள் பதுங்கியிருந்த பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.