1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Famous youtuber’s girlfriend commit suicide

பிரபல யூட்யூபரை காதலித்த கல்லூரி மாணவி! – கருத்து வேறுபாட்டால் தற்கொலை!

Tamilnadu
பிரபல யூட்யூபர் ஒருவரை காதலித்து வந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூட்யூபில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாக இருந்து வருபவர் சூர்யா. இவருக்கு திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விரக்தியடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சென்னை மேம்பாலத்தில் அடுத்தடுத்து வழிப்பறி! – காவல்துறை தீவிர விசாரணை!