தொடர்புடைய செய்திகள்
- மோடி தமிழ்நாட்ல கால வெச்சாலே ’இத’ டிரெண்ட் ஆக்கிடுராங்கலே பா: டுவிட்டரில் வச்சு செய்த குஷ்பு
- மீம் கிரியேட்டர்களின் சிம்மசொப்பனம் நம்ம தமிழிசை: பங்கமாய் கலாய்த்த பிரபல நாளேடு!!
- பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயந்தாரா... ?தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
- பாஜகவில் இணைந்த 2000 அஜித் ரசிகர்கள்... அடிச்சு தூக்கும் தமிழிசை
- அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்: டுவீட்டை டெலிட் செய்த பிரபல ஊடகம்
தமிழிசையை கேவலமாக கிண்டலடித்த பிரபல ஊடகம்!!
தமிழிசையின் உருவத்தை பிரபல ஊடகம் படு மோசமாக கிண்டலடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். எப்போதும் பிசியாக இருப்பார். அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் அன்றாட அசைவுகள் பற்றியும் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது எனவும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய வெற்றியடையும் எனவும் கூறி வருவார்.
இவரை பலர் சமூக வலைதளத்தில் கிண்டலடிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. எல்லோரும் அவரின் கட்சியையையும், அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் அவரது தோற்றத்தை வைத்து விமர்சிப்பது இல்லை.
இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று அவரது உருவத்தை வைத்தும், அவரது நிறத்தை பற்றியும், தரம் தாழ்த்து விமர்சித்துள்ளது. இது குறித்து பேசிய அவர் வக்கிர குணம் கொண்டவர்களே இப்படி விமர்சிப்பார்கள். இதனால் என் குடும்பத்தை சார்ந்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். அரசியல் பின்புலம் உடைய என்னையே இப்படி விமர்சிக்கிறாகள் என்றால் புதிதாக அரசியலில் நுழையும் பெண்களை எப்படி விமர்சிப்பார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
அடுத்த கட்டுரையில்
