புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 24 ஜனவரி 2019 (15:03 IST)

பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயந்தாரா... ?தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்காகாந்தி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவதால் பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸார் கூறிவந்தனர். 
இதற்கு குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
 
காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டு அரசிலுக்கு வருவது இது புதிதல்ல. முதலில் உத்தரபிரதேசத்தில் பிரசாரத்துக்கு களமிறங்கி தோல்வி கண்டவர்கள் காங்கிரஸார்.
 
பிரியங்கா வருகையை பார்த்து மோடி பயப்படுவதாக கூறுவது இந்த வருடத்தின் மிகப்பெரிய காமெடி. பிரியங்காவை கொண்டாட்டும் காங்கிரஸார் கட்சியின் தலைவராக உள்ள ராகுலில் தோல்வியையும் சேர்த்தே கொண்டாட வேண்டும். 
 
ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்த அவரது கட்சிகாரர்களுக்கே நம்பிக்கை இல்லை. முதலில் தன் மீதே ராகுலுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தான்  தற்போது பிரியங்காவை களத்தில் இறக்க முயற்சிக்கிறார். இவர்களின் எம்முயற்சியும் பலிக்கப்போவதில்லை.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பமே நாட்டை ஆண்டு வந்த நிலையில் தற்போது சாமானியனும் ஆள முடியும் என்ற நிலை வந்துள்ளது.மோடியால் ஏற்படுள்ள மாற்றத்தை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் காங்கிரஸின் ஒரே குடும்பமே  நாட்டை ஆள மக்கள் விரும்பமாட்டார்கள். பிரியங்கா வருகையை காங்கிரஸார் வேண்டுமானால் வரவேற்கலாம் இவ்வாறு கூறினார்.