தொடர்புடைய செய்திகள்
- அஜித் அரசியல்தான் வேண்டாம் என்றார், பாஜகவை அல்ல: சப்பக்கட்டு கட்டும் எச்.ராஜா
- கலைஞரையே எதிர்த்து பேசியவர் அஜித்: புகழ்ந்துதள்ளிய அமைச்சர் ஜெயகுமார்!!!
- அஜித் போல் அரசியல் வதந்திக்கு பதில் கூறிய நடிகை ...
- அஜித்தை புகழ ரஜினியை கலாய்த்தாரா தமிழிசை? கடுப்பான நெட்டிசன்கள்
- சிவாஜி, கமல், வரிசையில் அஜீத்தா ?
அடிச்சு தூக்கிய அஜித் ரசிகர்கள்: டுவீட்டை டெலிட் செய்த பிரபல ஊடகம்
தல அஜித் சமீபத்தில் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் தனது ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து தெளிவான, விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையை கிட்டத்தட்ட அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் வரவேற்றனர். வருடக்கணக்கில் அரசியலுக்கு வருவதாக சொல்லிக்கொண்டு ஆதாயம் அடைந்து வரும் நடிகர்கள் மத்தியில் அரசியல் குறித்த தெளிவான விளக்கத்தை அளித்த அஜித்துக்கு பாராட்டுக்கள் குவிந்தது
இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று பல வருடங்களுக்கு முன் அஜித் அரசியல் குறித்து வெளியான ஒரு பேட்டியின் ஒரு பகுதியையும் தற்போது அஜித் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியையும் தனது டுவிட்டரில் பதிவு செய்தது. இதனையடுத்து பொங்கி எழுந்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் முழு பேட்டியையும் குறிப்பிட்டு அவர் என்ன கூறியிருந்தார் என்பதை தெளிவாக விளக்கினர்.
மேலும் அந்த ஊடகத்திற்கு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சர்ச்சைக்குரிய அந்த டுவீட்டை அந்த ஊடகம் டெலிட் செய்துவிட்டது. இருப்பினும் ஏற்கனவே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்த அஜித் ரசிகர்கள் தொடரந்து அந்த ஊடகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
