1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (07:15 IST)

உங்களுக்கும் ஒரு காலம் வரும்: மு.க.அழகிரிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். அவரது ஆதரவாளர்கள் நேற்று மதுரை முழுவதும் பேனர், கட் அவுட்டுக்கள் வைத்து அசத்தினர்.
 
இந்த நிலையில் முக அழகிரியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது பிறந்த நாள் வாழ்த்தில், 'அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை. உங்களுக்கும் ஒரு காலம் வரும்.  எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக இணைய முயற்சித்து தோல்வியால் சோர்ந்து இருக்கும் மு.க.அழகிரிக்கு ரஜினியின் இந்த வாழ்த்து உற்சாகம் தரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் மு.க.அழகிரி இணைந்து பணியாற்றவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரஜினியின் இந்த வாழ்த்து மு.க.ஸ்டாலின் தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.