திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (10:50 IST)

வகுப்பறை போர்டில் மத வாசகம்! மாணவரை தாக்கிய ஆசிரியர்! – காஷ்மீரில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் மாணவரை சக மாணவர்களை கொண்டு ஆசிரியர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஜம்மு காஷ்மீரில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.



ஜம்மு காஷ்மீரில் கத்வா மாவட்டத்தில் பென் என்னும் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 10ம் வகுப்பு படித்து வரும் இந்து சமயத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் வகுப்பறை போர்டில் “ஜெய் ஸ்ரீ ராம்” என எழுதியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பள்ளி ஆசிரியர் பரூக் அகமது மற்றும் தலைமை ஆசிரியர் முகமது ஹபீஸ் ஆகியோர் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவனின் தந்தை குல்தீப் சிங் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்படி நடவடிக்கை எடுத்த போலீஸார் ஆசிரியர் பரூக் அகமதை கைது செய்துள்ளதுடன் தலைமறைவான தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் சமயரீதியான காரணங்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K