திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (10:53 IST)

போலி போலிஸ் நாடகம் – வெளிநாட்டு ஆசையில் 2.30 லட்சத்தை இழந்த இளைஞர் !

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி 2.30 லட்சத்தை மோசடி செய்த முத்துக்குமார் என்ற இளைஞரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் போலிஸ் அதிகாரி என்ற தோரணையில் ஊருக்குள் பொய் சொல்லி சுற்றி வந்திருக்கிறார். மேலும் அர்மேனியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் 2.3 லட்சம் பெற்றுள்ளார்.

ஆனால் ஆறுமாதக் காலமாகியும் பிரபுவை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல் அவரிடம் இருந்து வாங்கிய தொகையையும் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து பிரபு சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகாரில் முத்துக்குமாரை பற்றிய விசாரணையில் இறங்கிய போது அவர் போலிஸே இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.