செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (13:38 IST)

செவிலியரை கற்பழிக்க முயன்ற 108 டிரைவர் – போலிஸ் வலைவீச்சு !

கீழ்நத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் செவிலியரைக் கூட பணிபுரியும் டிரைவரேக் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கீழ்நத்த தெற்கூர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் 108 வாகனம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் மாரியப்பன் என்பவர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். மாரியப்பனுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கும் செவிலியராக அந்த பெண்ணும் பணியாற்றி வருகிறார்.

சம்பவம் நடந்த நாளில் குடிபோதையில் இருந்த மாரியப்பன் அந்த செவிலியரிடம் தவறாக நடந்து அத்துமீற முயற்சி செய்துள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல் போடவே அருகில் இருந்த ஊர்மக்கள் அங்கு கூடியுள்ளனர். இதனால் பயந்துபோன மாரியப்பன் அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதனையடுத்து அந்த செவிலியர் அளித்த புகாரின் பேரில் மாரியப்பனைப் போலிஸார் தேடி வருகின்றனர்.