செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2019 (12:12 IST)

30 ரூபாய் கேட்ட மனைவி… முத்தலாக் சொன்ன கணவன் !

டெல்லியில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் வாங்க பணம் கேட்ட மனைவியை கணவன் முத்தலாக் சொல்லி விலக்கியுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

டெல்லியை அடுத்த தாத்ரி பகுதியில் சபீர் என்பவர் தனது மனைவி ஸைனப்புடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஸைனப் தன் கணவரிடம் காய்கறி வாங்குவதற்காக 30 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் வேண்டுமென்றே அதைத் தர மறுத்த சபீர் ஸைனப்பிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நடுரோட்டில் வைத்து மூன்று முறை தன் மனைவியைப் பார்த்து முத்தலாக் சொல்லியுள்ளார்.

இந்த அநியாயத்தை ஸைனப் தட்டிக்கேட்க சபீர் தனது  குடும்பத்தோடு சேர்ந்து ஸைனப்பை அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் அவர் முகத்தில் காறித் துப்பியுள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இதுபற்றிப் போலிஸில் புகார் அளித்துள்ளார். ஸைனப்பின் புகாரையடுத்து அதையடுத்துப் போலிஸார் சபீரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது குடும்பத்தினரையும் தேடி வருகின்றனர்.