1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. extra tokens tomorrow in registrar office

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்: அதிரடி அறிவிப்பு..!

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவு துறை தெரிவித்துள்ளது. 
 
முகூர்த்த நாள் மற்றும் நல்ல நாட்களில் கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலர்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திர பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில்  200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் பத்திர பதிவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
கட்சிக்கும் நிர்வாகிகளுக்கும்துணை நின்று ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!