முதல்வர் அறையில் மருமகன் சபரீசன்: நிழல் முதல்வர் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!
முதல்வர் அறையில் மருமகன் சபரீசன்: நிழல் முதல்வர் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!
தமிழக முதல்வராக இன்று முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவருக்கு பின்னால் அவருடைய மருமகன் சபரீசன் இருப்பது போன்றும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
முதல்வர் ஸ்டாலினுகு தனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்ள சபரீசன் வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒருசில நெட்டிசன்கள் வேண்டுமென்றே முக ஸ்டாலின் முதல்வர் என்றால் சபரீசன் நிழல் முதல்வர் என்றும் அவருடைய சொல்படிதான் முதல்வர் செயல்படுவார் என்றும் எந்த விதமான ஆதாரமும் இன்றி கூறி வருகின்றனர் இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது