1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (15:48 IST)

கோபாலபுர வீட்டில் அக்கா கைபிடித்து அழுத மு.க. ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். முதலைச்சராக பதவியேற்ற பின்னர் முக ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு சென்றார். 
 
அதையடுத்து CIT நகரில் அவரது அம்மா தயாளு அம்மாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். பின்னர் அங்கிருந்து அக்கா முக செல்வி வீட்டிற்கு சென்றார். அங்கு கலைஞரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய போது கண்ணீர் மல்க அக்காவின் ஆறுதலையும் ஆசீர்வாதத்தையும் பெற்றார்.