ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஆகஸ்ட் 2020 (20:51 IST)

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 4 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு !

இந்தியாவில் கொரொனா தொற்றுக்கு இதுவரை 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 4 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து மாநிலங்களில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்குள் இருக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்,  தமிழகத்தில் பொது ஊரடங்கு  மேலும்  நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய காணொலி வாயிலான ஆலோசனை நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இன்று மாலை மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தற்போது, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த  4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்புகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில், நாடு முழுவதும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், பள்ளி, கல்லூரிகள் செப்.30ஆம் தேதி மூடப்பட்டிருக்கும் எனவும்,திறந்த வெளி திரையரங்கம் செப்ட்ம்பர் 21ம் தேதி முதல் செயல்படும் எனத் தெரிவித்துள்ளது.


மேலும்,  மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது,  போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது எனவும், மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ -பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது எனவும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை  படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம் எனவும் ஆனால் இது கட்டாயமல்ல கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டு, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளிலும் 100 பேர் வரை பங்கேற்க அனுமதியளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.