1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (10:12 IST)

அரசியல் விளையாட்டுகளில் வித்தகர்.. அனைத்து விளையாட்டுகளின் ரசிகர் கலைஞர்! – உதயநிதி ஸ்டாலின்!

udhayanithi
கோவை கொடிசியா வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.


 
இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்

அப்போது பேசிய உதயநிதி :

12600 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றது எனவும், 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

மேலும் மேடையில் இருக்கும் விளையாட்டு வீராங்கனைகள் தன்யதா ,வித்யா போன்று நிறைய பயிற்சி பெற்று சாதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய அவர், கேலோ இந்தியா போட்டியில் 98 பதக்கங் களுடன் இரண்டாமிடம் வந்துள்ளோம், அடுத்த ஆண்டு முதலிடம் பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்படுவதால் சிஐஐ உள்ளிட்ட அமைப்பினர் விருதுகளை வழங்கி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு பள்ளிகல்வி துறைக்கு 44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், விளையாட்டு துறைக்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், தந்தையாக இருந்தாலும் விளையாட்டு துறையை விட கல்விதுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்வதாகவும் , தந்தை கொடுக்காததை நண்பர் நீங்க கொடுக்கலாம் என அவரைபார்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின், பள்ளிகளில் பி.இ.டி வகுப்பை அறவியல்,கணக்கு பாடத்திற்காக எடுத்து கொள்கின்றீர்கள், அதை கொடுத்தால் போதும், பணம் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

அரசியல்வாதி, பேச்சாளர், இலக்கியவாதி என பல முகங்கள் கலைஞருக்கு உண்டு எனக்கூறிய அவர், ஏன் இந்த திட்டத்திற்கு கலைஞர் பெயர் என கேட்கலாம் எனவும், கலைஞர் சிறுவயதில் விளையாட்டுகளை விளையாடியவர் , பின்னர் அரசியல் விளையாட்டுகளில் இருந்தார் எனக்கூறிய அவர்,அனைத்து விளையாட்டுகளின் ரசிகர் அவர் எனவும், கிடைக்கும் நேரங்களில் போட்டிகளை கண்டு ரசிப்பவர் எனவும் தெரிவித்தார்.


விளையாட்டு வீரராக இருக்கும் அனைத்து பண்புகளும் கலைஞருக்கு இருந்தது எனவும், எந்த வசதியும் இல்லாத காலத்தில் கிராமம் கிராமம் சென்றவர் கலைஞர் எனக்கூறிய அவர், ஒவ்வொரு விளையாட்டு வீர்ருக்கும் ஷார்ப்பான சிந்தனை வேண்டும் எனவும், தோல்வி வெற்றி என்ற இரண்டையும் சம்மாக பார்க்கும் மன திடம் கலைஞரிடம் உண்டு், அதே போன்ற மன உறுதி ஒவ்வொரு வீரருக்கும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டீம் ஓர்க் கலைஞருக்கு பிடித்த ஒன்று எனவும்,அவருக்கு பின் அந்த டீம்மை முதல்வர் ஸ்டாலின் இப்போது வழி நடத்துகின்றார் எனக்கூறிய அவர், அரசியல் ரீதியாக இருக்கும் நெருக்கடிகளை டீம் ஓர்க் மூலம் முறியடித்தவர் கலைஞர் எனவும் தெரிவித்தார். யாராலும் வீழ்த்த முடியாத வீரராக கலைஞர் இருந்தார் எனதெரிவித்தார்.

அரசு கல்லூரி விடுதிகளில் வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை , மக்களின் வரிப்பணத்தில் இந்த உதவிகள் செய்யப படுகின்றது, உதவிகள் செய்யவேண்டியது அத்தனையும் நம்முடைய பொறுப்பு என தெரிவித்த அவர், விடுதி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்பு வெளியில் வந்த உதயநிதி ஸ்டாலினிடம், தேர்தலுக்குப் பின்னர் திமுக காணாமல் போகும் என்று பிரதமர் மோடி பேசி இருப்பது குறித்து கேள்விக்கு

 அப்படி சொன்னவர்கள் தான் காணாமல் போயிருக்கிறார்கள் அவர் பதில் அளித்தார்.