1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. raid in admk former mla prabhu house

அதிமுக இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!

லஞ்ச ஒழிப்பு போலீசார்
முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் மற்றும் நகர் மன்ற தலைவர் பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுகவின் இன்னொரு முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் இன்று காலை முதல் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
பிரபு எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது 
 
கள்ளக்குறிச்சியில் உள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபு வீடு உள்பட மொத்தம் ஒன்பது இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் சோதனைக்கு பின்னரே அவரது வீட்டில் இருந்து என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது 
 
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிபிஐ ,அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு பக்கம் எதிர்க்கட்சியினர்  வீடுகளில் சோதனை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதே போல் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பிரியாணி கடையில் திடீர் தீ விபத்து..! 43 பேர் உடல் கருகி பலியான சோகம்!