புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:47 IST)

+2 பொதுத்தேர்வு எப்போது..? எப்படி..? – தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ள +2 பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான +2 பொது தேர்வுகள் முதலில் ஏப்ரலில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் பின்னர் மே 3ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மீண்டும் பொதுத்தேர்வு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போது பொதுத்தேர்வு நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பொதுத்தேர்வு எப்போது நடைபெற்றாலும் பொதுதேர்விற்கு 15 நாட்கள் முன்னதாக தேதி மற்றும் அட்டவணை அறிவிக்கப்படும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.