வலிமை ரிலிஸ் தேதி மீண்டும் மாறுமா? அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

Last Modified திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:30 IST)

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் மே மாதத்தில் இருந்து தொடங்கும் என சொல்லப்படுகிறது. படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளுக்கும் பலக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் படத்தை ரிலீஸ் செய்தால் வசூலை அள்ள முடியாது என்பதால் மீண்டும் ரிலிஸ் தேதியை தள்ளிவைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :