1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:47 IST)

வாக்கு எந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது! – சத்யப்ரதா சாகு விளக்கம்!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகள் மே 2ல் எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு எந்திரங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது என சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குப்பெட்டிகளை கணினி மூலம் ஹேக் செய்து ஓட்டுகளை மாற்றலாம் என சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு “வாக்குப்பதிவு எந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது அதற்கான வாய்ப்புகளும் இல்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒரு கால்குலேட்டரை போல செயல்பட கூடியவை” என கூறியுள்ளார்.